July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 30, 2018

உங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்

0 1285 Views

‘சர்கார்’ கதை விவகாரம் ஒரு வழியாக கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட நிலையில் ஒருபுறம் ஏ.ஆர்.முருகதாஸ் ‘வதந்திகளை நிறுத்துங்கள்…’ என ட்விட்டரில் கூறிக்கொண்டிருக்கிறார். (அப்படியானால் வதந்தி பரப்பக் காரணமே அவர்தானே..? கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது..? இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்..?) இன்னொரு பக்கம் கே.பாக்யராஜின் பேட்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் எவ்வளவு புண்பட்டிருப்பார் என்பதும் […]

Read More
October 30, 2018

ஜீனியஸ் விமர்சனம்

0 1694 Views

‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ பார்க்கும்போது மகன் வீராட் கோலி ஆக வேண்டும் என்றும், விஜய் டிவி பார்த்து “என் மகன் சூப்பர் சிங்கரா ஆகணும்…” என்றும், அடுத்த வீட்டுப் பையன் அமெரிக்காவில் செட்டில் ஆனதைக் கேட்டு என் பிள்ளை ஆஸ்திரேலியாவில் ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்றும் அதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்குபவரா நீங்கள்..? உங்களுக்காகத்தான் இந்தப் படம். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பெற்றோர் இந்த ரகம்தான். ஆக, ஒட்டுமொத்த பெற்றோருக்கான ஒரு பாடம்தான் இந்தப்படம். அறிவாளியான குழந்தையைப் பெற்றவர்கள் […]

Read More
October 30, 2018

சர்கார் ‘கதை நாயகன்’ வருண் ராஜேந்திரன் – பணிந்தார் முருகதாஸ்

0 1128 Views

கடந்த சில நாள்களாக கேஸ், பெட்ரோல் விலை உயர்வைத்தாண்டி ‘மீடூ’வைத்தாண்டி ஊடகங்களில் பரபரப்புக்குள்ளான விஷயம் இந்த ‘சர்கார் கதைத் திருட்டு’ விஷயம்தான். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.முருகதாஸின் கதைகள் திருட்டு முத்திரை குத்தப்படுவதும் அவர் அதிலிருந்து வெளியே வந்து அதைத் தன் கதையாகவே நம்ப வைத்துவிடும் சாதுர்யமும் அவரை மேலும் மேலும் தவறுகள் செய்யும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டிருந்தது எனலாம். அவர் காப்பியடித்த நபர்களில் ஹாலிவுட்டின் ‘கிறிஸ்டபர் நோலனி’ல் இருந்து ‘சர்கார் கதை நாயகன்’ வருண் ராஜேந்திரன் வரை எல்லா […]

Read More
October 29, 2018

இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? – சிவகுமார் விளக்கம்

0 1116 Views

“செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி […]

Read More
October 29, 2018

ஓவியா திறக்கும் சீரமைக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்..!

0 1130 Views

அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால்தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும். இதை வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார். அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். பழைய […]

Read More
October 28, 2018

அப்பா மீதான அவதூறு குறித்து முதல்முறையாக மனம் திறக்கிறார் கபிலன் வைரமுத்து

0 1537 Views

ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக […]

Read More