September 19, 2024
  • September 19, 2024
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 24, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் வினியோகம் துண்டிப்பு

0 981 Views

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில், இன்று முதல் ஸ்டெர்லைட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஊர்வலமாக சென்ற பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக மாறியபோது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பத்து பேர் சம்பவ இடங்களிலேயே பலியாக, […]

Read More
May 22, 2018

நான் பப்ளிசிட்டிக்காக என் ரசிகருக்கு போஸ்டர் ஒட்டலை – சிம்பு

0 1303 Views

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாகக் கருதப்படும் விஷாலும், சிம்புவும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அதிசயம் சென்னையில் நடந்தது. சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘எழுமின்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் விஜி. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் […]

Read More
May 21, 2018

நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் 3 பேர் பலி… தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை

0 1093 Views

பொதுவாக வவ்வால்களின் சிறுநீர், உமிழ்நீரிலிருந்து உருவாகும் உயிர் கொல்லியான ‘நிபா வைரஸ்’ 1998-99ம் ஆண்டுகளில் பன்றிகளில் உருவாகி அதன்பிறகு மற்ற விலங்குகளுக்கு வந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக மாறியுள்ளது. இந்த வைரஸின் அச்சம் இப்போது இந்தியாவில்… குறிப்பாக கேரளாவில் பரவியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இதுவரை ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை மூன்றுபேர் உயிரிழந்துளார்கள். இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ‘நிபா’ வைரஸ் பரவியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Read More
May 21, 2018

குமாரசாமி பதவி ஏற்பில் கலந்து கொள்ளும் அர்விந்த் கெஜ்ரிவால்

0 964 Views

கர்நாடகாவில் வரும் 23-ந்தேதி புதனன்று மாநில முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளது தெரிந்த விஷயம். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற […]

Read More
May 20, 2018

ரஜினி முதல்வரானால் நீட் முதல் நியூட்ரினோ வரை தீர்வு – தமிழருவி மணியன்

0 1128 Views

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் வாழ்வில் முக்கிய பங்காற்றுவது தெரிந்த விஷயம்தான். அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தினரைக் கூட்டி ஆலோசனைகளை ரஜினி மேற்கொண்டிருக்க,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது… “ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்குத் தயாராகி […]

Read More
May 20, 2018

காவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல – ரஜினி

0 1051 Views

இன்று ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் போயஸ் கார்டனிலுள்ள தன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில்களின் சாரம்… பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.எடியூரப்பா பெரும்பான்மையை […]

Read More