January 21, 2025
  • January 21, 2025
Breaking News
May 20, 2018

ரஜினி முதல்வரானால் நீட் முதல் நியூட்ரினோ வரை தீர்வு – தமிழருவி மணியன்

By 0 1194 Views

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் வாழ்வில் முக்கிய பங்காற்றுவது தெரிந்த விஷயம்தான்.

அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தினரைக் கூட்டி ஆலோசனைகளை ரஜினி மேற்கொண்டிருக்க,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது…

“ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்குத் தயாராகி விட்டனர். எல்லோர் மனதிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

ரஜினியை நான் பத்து நாள்களுக்கு ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி வருகிறேன். மற்ற நேரங்களில் போன் மூலம் எங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

கர்நாடகாவில் எலியும், பூனையுமாக இருந்த சித்தராமையாவும், குமாரசாமியும் இன்று நட்பு பாராட்டிக்கொண்டு நடிப்பது, பதவிக்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல், இதில் மக்கள் நலன் ஏதுமில்லை..!”