April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அடுத்த ஓடிடி வெளியீடு நெட்பிளிக்ஸ் – அட்லீ தயாரிப்பில்..?
May 31, 2020

அடுத்த ஓடிடி வெளியீடு நெட்பிளிக்ஸ் – அட்லீ தயாரிப்பில்..?

By 0 657 Views

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் அந்தகாரம் திரைப்படத்தின் உரிமையை நெஃட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், கிரீடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘அந்தகாரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. வரும் மாதம் முழுக்க தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லாத சூழலில் இப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீஸாககூடும்.

அப்ப சூர்யாவுக்கு அடுதத ஜாக்பாட் அட்லீக்கா..?