January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல நடிகரின் அண்ணன்
November 20, 2018

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல நடிகரின் அண்ணன்

By 0 1083 Views

விஜய் சேதுபதி வித்தியாச வேடமேற்று டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிக்கிறார்.

அவர் ஒரு பிரபல நடிகரின் அண்ணனும் கூட. ஆம், நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.

“உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது.

இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை.

ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனிலை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் ஒத்துக்கொண்டு அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார்.

குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார். ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் பேசப்படும்..!” என்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

சீதக்காதி படத்தை ‘பேஸ்ஸன் ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சீக்கிரம் காட்டுங்க சீதக்காதி தரிசனத்தை..!