April 20, 2025
  • April 20, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நட்பே துணை 2வது பாடல் சிங்கிள் பசங்க லிரிக்கல் வீடியோ
January 27, 2019

நட்பே துணை 2வது பாடல் சிங்கிள் பசங்க லிரிக்கல் வீடியோ

By 0 2356 Views
தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி பெற்று வரும் ‘ஹிப்ஹாப்’ ஆதி, அவரே நடித்துக் கொண்டிருக்கும் ‘நட்பே துணை’ படத்தில் சமீபத்தில் வெளியிட்ட ‘கேரளா சாங்’ பாடல் வெற்றியடைந்தது.
 
தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். ‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறராம் ‘ஹிப்ஹாப்’ ஆதி.
 
‘நட்பே துணை’ படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை, அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.
 
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யும் படத்தில் கதை,  திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருப்பவர்கள் ஸ்ரீகாந்த் & தேவேஷ் ஜெயச்சந்திரன்.
 
கீழே ‘சிங்கிள் பசங்க’ பாடல் லிரிக்கல் வீடியோ…