January 23, 2026
  • January 23, 2026
Breaking News
September 14, 2020

அட்லி மனைவி ப்ரியாவின் தாத்தா காலமானார்

By 0 811 Views

இயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்து கொண்டது உலகறிந்த சங்கதி.

இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ப்ரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி கூறியதாவது:_

 ” ப்ரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்றுதான் அழைப்பேன்.

அவருக்கு 82 வயது. கடந்த வாரம் கூட இருவரும் அருமையாக உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நண்பராகவும் ஆலோசகராகவும் எனக்கு இருந்தார். நீங்கள் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்துபோயிருக்கிறது.

எங்கள் குடும்பம் ஒரு தூணை, நல்ல நண்பரை இழந்துவிட்டது. எங்கள் வாழ்க்கையில் உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு என்பதை உணர்கிறோம். எனவே உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வாழும் வரை பகிருங்கள்..! “