February 3, 2025
  • February 3, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கேரள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அடுத்தடுத்த மரணங்கள்
April 7, 2020

கேரள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அடுத்தடுத்த மரணங்கள்

By 0 632 Views

மோலிவுட்டின் சீனியர் இசை அமைப்பாளர் எம்கே அர்ஜூனன் கொச்சியில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்ரல் 6) மரணமடைந்தார். எம்கே ஆர்ஜூனனுக்கு 84 வயதாகிறது.

இவர் 50 வருடங்களுக்கும் மேலாக மலையாள திரையுலகில் பங்காற்றியுள்ளார். மலையாளத்தில் சுமார் 218 படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகருக்கு ரொம்ப நெருக்கம் என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் இவருடன் தான் கீ போர்டு பிளேயராக பணிபுரிந்து வந்தாராம்.

இவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை சமூகவலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பிரபல ஒலிவடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் எழுதியுள்ள இரங்கல் பதிவில், ”உங்கள் நிறைய டியூன்கள் என் நினைவிலேயே இருக்கிறது. உங்களது கலை பல தலைமுறை இசை ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தியுள்ளது. உங்களது இழப்பு இசையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

 இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் சசி கலிங்கா இன்று மரணமடைந்த செய்தி வந்திருக்கிறது. அவருக்கு வயது 59.

Actor Sasi Kalinga passed away.ஆதமிண்டே மகன் அபு, இந்தியன் ருப்பீ, ஆமென் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் சசி கலிங்கா. வி.சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு வெளியான ‘கேரளா கஃபே’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடந்த சில தினங்களாகவே கல்லீரலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சசி கலிங்கா கோழிகோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சசி கலிங்கா மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த நாள் சம்பவித்த இந்த மரணங்கள் மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளன.