July 9, 2025
  • July 9, 2025
Breaking News
July 10, 2019

காந்தி ஜெயந்திக்கு பாஜக எம்பிக்கள் பாதயாத்திரை செல்க – மோடி

By 0 836 Views
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்தது..இந்த தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
 
இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினெட் உறுப்பினர்கள், மாநில முதல் மந்திரிகள் மற்றும் காந்தியை பின் தொடரும் தொண்டர்கள் பலர் உள்ளனர். 
 

இதனையடுத்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில்,  மத்திய அரசு வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு, 15கிமீ வீதம் மொத்தம் 150கிமீ தொலைவிற்கு, அவரவர் தொகுதியில் இருந்து பாதயாத்திரை செல்லுமாறு பாஜக எம்பிக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘இந்த பாதயாத்திரையை மேற்கொள்ளுமாறு மோடி கூற மிக முக்கிய காரணம் கிராமங்களின் மறுமலர்ச்சியே ஆகும்’ என கூறியுள்ளார்.