இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம்.
“அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார்.
ட்விட்டரில் அதை வெளியிட்டது மட்டுமல்லாமல் அதில் விராத் கோலி, ஹ்ரித்திக் ரோஷன், சாய்னா நேவால் ஆகியோரை ‘டேக்’ செய்தும் இருந்தார். அதை சவாலாக எடுத்துக்கொண்ட விராத் கோலி, தானும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை ‘டேக்’ செய்தார்.
இதை சவாலாக ஏற்ற பிரதமர் மோடி, தான் நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டார். இந்தப் பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் யாரை சவாலுக்கு அழைத்தார் என்கிறீர்களா..?
கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா ஆகியோருக்கு மட்டுமன்றி, நாற்பது வயதைக் கடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும்தான் அவர் ‘ஃபிட்னஸ் சவால்’ விடுத்துள்ளார்.
இது தொடரும் என்று சொல்லத் தேவையில்லை. மோடியின் ஃபிட்னஸ் வீடியோ கீழே…