January 25, 2026
  • January 25, 2026
Breaking News
July 11, 2020

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா

By 0 782 Views

திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார் அல்லவா?

அதில் நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது அவர் 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ரோஜா சாகசம் செய்வதற்காக ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா?” என இந்த செயலுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!