December 12, 2025
  • December 12, 2025
Breaking News
January 19, 2019

நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்

By 0 1287 Views

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…

“வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின.
 
இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம். 
 

பிரதமர் மோடி சொன்ன பொய்களில் பெரிய பொய், கருப்புப் பணத்தை மீட்பேன் என்பதுதான். வங்கிக் கணக்கில் பணத்தைப் போடுவேன் என்று கூறிவிட்டு மக்கள் தலையில் கல்லைப் போட்டுவிட்டார்.

மத்திய பாஜக அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பண மதிப்பு நீக்கம் மற்றும் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் பிரதமர் மோடிக்கு பயமாக உள்ளது. நம்முடைய ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. அதன்மூலம் இந்தியாவை நாம் காப்போம். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும்.

மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல், நாம் வேறு வேறு மாநிலத்தவர்களாக இருந்தாலும் நமது நோக்கம் ஒன்றுதான். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்..!”