January 23, 2026
  • January 23, 2026
Breaking News
September 26, 2018

தினகரனுக்கு வேலை செய்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்சினைகள் – விஜயபாஸ்கர்

By 0 1296 Views

“இலங்கை இறுதி கட்டப் போரில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவிக்க அப்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியாயிருந்த மத்திய அரசு உதவி செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவே தெரிவித்துள்ளார்.

எனவே ஐ.நா.சபை தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்…!” என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

மேலும் அவர் பேசியதிலிருந்து…

“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதுடன் அரசியலை விட்டே விலகவேண்டும்.

டி.டி.வி.தினகரன் பணத்தைக் கொடுத்துதான் கூட்டங்களை கூட்டி வருகிறார். துணிவிருந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் புதுக்கோட்டையில் நிற்கட்டும். நானும் நிற்கத்தயார். என்னை அவர் வென்று காட்டட்டும்.

இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டன் இருப்பான். தினகரன் சசிகலாவின் விசுவாசி அல்ல. ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா படத்தை போட வேண்டாம் என்று கூறியவர் அவர்தான்.

ஆர்.கே.நகர் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வேலை செய்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், நான் எந்தப் பிரச்சனையையும் கண்டு பயப்படவில்லை. அதை எதிர் கொண்டு வெற்றி பெறுவேன்.

10 ஆண்டு காலம் பதுங்கு குழியில் இருந்தவர் தான் தினகரன். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். தினகரன் வைத்துள்ள வி‌ஷமே அவருக்கு வினையாக முடியும்..!”