November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எம்ஜிஆர் மகன் படப்பிடிப்பு பொதுமக்களால் நிறுத்தம்
September 30, 2019

எம்ஜிஆர் மகன் படப்பிடிப்பு பொதுமக்களால் நிறுத்தம்

By 0 828 Views

இரண்டு நாள்கள் முன்னர்தான் கார்த்தி நடிக்கும் சுல்தான் படப்பிடிப்பு திண்டுக்கல் கோட்டையில் வைத்து இந்து அமைப்புகளால் முற்றுகையிட்டு நிறுத்தப்பட்டது. இப்போது சசிகுமார் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு பொதுமக்கள் தலையீட்டால் போலீஸ் விசாரணைக்குள்ளாகி படப்பிடிப்புக்கு பயன்பட்ட ஆம்புலன்ஸ் சிறைபிடிக்கப்பட்டது.

விஷயம் இதுதான்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது.இங்கே தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

இங்குள்ள மருத்துவக்கல்லூரியில்தான் முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவம் படித்து வந்த உதித்சூா்யா என்ற மாணவன் நீட்தோவில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்க்ள் என்பது குறிப்ப்டத்தக்கது.

மேலும் இவ்வழக்கில் சென்னை மாணவி மற்றும் 2 மாணவா்கள் உள்பட அவா்களது தந்தைகளை கைது செய்து தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா்.அதில் பிரவீண் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா்.

அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலியுடன் வந்தது. அதன் உடன் 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் சத்தம் எழுப்பியவாறு வந்தனா். இதனால் அங்கிருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஜி ஹெச் காம்பவுண்டுக்குள் வந்த வாகனங்கள் திரும்பவும் வெளியில் சென்றது. இதன்பின்னா் வெளியில் சென்ற வாகனங்கள் மீண்டும் அதேபோல் 2 முறை வந்து சென்றது. இதனைத் தொடா்ந்து டென்ஷனான அங்கிருந்த மக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களை வழிமறித்து விசாரித்தார்கள்.

அப்போது பிடிப்பட்டவர்கள் பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமாா் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக தெரிவித்தார்கள். அதைக் கேட்டு பொதுமக்களுக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டவா்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனிடையே இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸை பொதுமக்கள் சிறை பிடித்தார்கள்.

இதன்பின்னா் அங்கு வந்த சிபிசிஐடி மதுரை காவல் ஆய்வாளா் சேகா் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினாா். அப்போது அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஓட்டுநரை க.விலக்கு போலீஸில் ஓப்படைத்தாா். இதனைதொடா்ந்து படக்குழுவினரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் மேற்படி படத்தின் புரொடக்ஷன் டீம், இந்த தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி வாங்கி உள்ளதாகவும் அதன் படி போடி அருகே காமராஜபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்று வந்த படப்பிடிப்பின் தொடா்ச்சியாக தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் வேறு இடத்தில் நடத்த திட்டமிட்டு. இந்த தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் நடத்தலாம் என உதவி இயக்குநா்கள் மூலம் ஒத்திகை பாா்க்கப்பட்டதாக தெரிவித்தனா். இதனையடுத்து பொதுமக்கள் கூடும் இடங்களில் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

மேலும் நோயாளிகள் அதிகம் உள்ள மருத்துவமனை வளாகத்தில் படப்பிடிப்பு நடத்துவற்கு மருத்துவமனை நிா்வாகத்திடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.