November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடவிருக்கும் மெஹந்தி சர்க்கஸ்
April 11, 2019

குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடவிருக்கும் மெஹந்தி சர்க்கஸ்

By 0 800 Views
ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார்.
 
இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா.
 
படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில பேச்சுகளிலிருந்து…
 
விழாவில்  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா  ஈஸ்வரன் பேசியதாவது…
 
இந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம்.
 
இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்..!”
 
படத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசுகையில்… 
 
“இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும்.
 
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்துதான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்..!” என்றார்.
 
படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா –
 
“இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில்  மூன்று காதல்கள் உள்ளன.  ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல்.
 
இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்..!”
 
இயக்குநர் சரவண ராஜேந்திரன் – 
 
“எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார்.
 
இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது.
 
ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது.
 
நடிகை மிகப் பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்..!” 
 
மெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது