November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 18, 2019

மீரா மிதுனின் ஊழல் தடுப்பு பதவி பறிக்கப்பட்டது

By 0 675 Views

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன்.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் எடுத்த மீரா மிதுன், “ஊழல் செய்பவர்கள் யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. நான் உங்களை எந்நேரமும் கவனித்துக் கொண்டே இருப்பேன்” என பேசிவந்தார்.

இந்த நிலையில் மீரா மிதுனிடம் இருந்து அந்த பதவியை பறித்து  அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்.. அவருக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த பிரபலமான டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் என்பவர் தற்போது அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீரா மிதுன் தன் தன்னை பற்றிய போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை சமர்ப்பிக்காததால்தான் இந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது..

அதுமட்டுமல்ல மீரா மிதுன் வகித்துவந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவிக்கு என எந்த அதிகாரமும் கிடையாது.. அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அளிக்கும் உரிமை மட்டுமே இருக்கிறது தற்போது அந்தப் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.