பெருநகர சென்னை பகுதியில் தனது பிரமாண்டமான நுழைவைக் குறிக்கின்ற வகையில், மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல் சென்னையில் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்கள்/விஷன் சென்டர்களைத் தொடங்குகிறது…
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சென்னை முழுவதும் கண் மருத்துவமனைகள்/பார்வை மையங்களின் இந்த விரிவாக்கத்திற்காக ₹100 கோடி முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதல் முறையாக, இந்த மருத்துவமனை விரைவான குணமாக்கலுடன், ஒரு வலியில்லா குறைந்த பட்ச ஊடுருவும் வகை லேசர் ஒளிவிலகல் சிகிச்சை (ரிஃப்ராக்டிவ் லென்டிகுலர்) செயல்முறையான SiLK Elita சிகிச்சையை வழங்கும், இது லேசர் பார்வை திருத்தத்தில் பிளேடுகள் அல்லது ஃபிளாப்களின் தேவையை நீக்குகிற ஒரு புரட்சிகர சிகிச்சை முறையாகும்.
சென்னை, ஆகஸ்ட் 01,2025: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் கண் பராமரிப்பு வழங்குநர்களில் ஒன்றான மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் (‘மேக்ஸிவிஷன்’), சென்னை முழுவதும் 10 கண் மருத்துவமனைகள்/பார்வை மையங்களைத் தொடங்குவதன் மூலம் சென்னையில் அதன் உத்திசார் விரிவாக்கத்தை அறிவித்தது.
மேக்ஸிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் GSK வேலு மற்றும் இணைத் தலைவர் டாக்டர் காசு பிரசாத் ரெட்டி ஆகியோரின் முன்னிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் திரு. மகேந்திர சிங் தோனி (MS Dhoni) அவர்களால் இந்த மருத்துவமனை மற்றும் பார்வை மையம் தொடங்கிவைக்கப்பட்டது.
மேக்ஸிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ், சென்னையின் கிளினிக்கல் & அகாடமிக் இயக்குநர் டாக்டர் P. கணேஷ் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கான பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷிபு வர்க்கீ ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இந்த துவக்கத்துடன் தொடங்குகின்ற ₹100 கோடி முதலீட்டுடன், மேக்ஸிவிஷன் சென்னை முழுவதும் தனது வலையமைப்பை விரிவுபடுத்த நோக்கம் கொண்டுள்ளது. மேக்ஸிவிஷன் ஏற்கனவே திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் கண் மருத்துவமனைகளை நடத்தி வருகிறது.
மேலும், சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் மேம்பட்ட, மலிவு விலையிலான மற்றும் சமூகம் மையப்படுத்தப்பட்ட கண் சிகிச்சையை வழங்குவதற்கான தனது பணியை நிறைவேற்ற அனைத்து மாவட்டங்கள்/நகரங்களிலும் விரிவாக்கம் செய்ய விரும்புகிறது.
அண்ணா நகரில் உள்ள மேக்ஸிவிஷன் மருத்துவமனையில், சென்னையின் முதல் மடிப்பு-இல்லாத, கத்தி-இல்லாத லேசர் பார்வை திருத்தம் செய்யும் சிகிச்சையான “SiLK Elita”வை MS தோனி தொடங்கி வைத்தார்.
இந்தச் சிகிச்சை வலியில்லா அனுபவம், அடுத்த நாள் முழுமையான குணமாக்கல் மற்றும் குறைந்த பட்ச கண் வறட்சி ஆபத்து போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இந்த மருத்துவமனைகள் ரோபோடிக் ஃபெம்டோ-லேசர் கண்புரை அறுவை சிகிச்சை, விழித்திரை, கார்னியா மற்றும் க்ளோகோமா (கண்ணில் அழுத்த நோய்) ஆகியவற்றிற்கான மேம்பட்ட நோயறிதல் முறைகள், நீரிழிவு விழித்திரை நோய் சிகிச்சை, குழந்தைகள் கண் மருத்துவம் மற்றும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கும் வசதிகளைக் கொண்டுள்ளன. இந்த மூலோபாய விரிவாக்கம், சென்னையில் அதிகரித்து வரும் கண்புரை, க்ளோகோமா மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த பார்வைக் கோளாறுகளின் சுமைக்கு நேரடியாகத் தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது.
மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் GSK வேலு கூறுகையில், “இது எங்களுக்கு நீண்ட காலமாக காத்திருக்கும் ஒரு விஷயம், மேலும் மேக்சிவிஷனின் நிறுவன தலைமையகம் அமைந்துள்ள சென்னைக்கு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதிக தேவை உள்ள, அதிக சாத்தியம் கொண்ட சென்னை சந்தையில் எங்கள் தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு மூலோபாய முன்னோக்கிய படியை இன்றைய தினம் குறிக்கிறது. MS தோனி மூலம் சென்னையில் எங்கள் பிரமாண்டமான துவக்கமானது, வளர்ந்து வரும் கண்புரை பாரம், விழித்திரை, க்ளோகோமா மற்றும் பல பார்வைக் கோளாறுகளை திறம்பட நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு வலுவான, பரவலாக்கப்பட்ட கண் மருத்துவ உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான எங்கள்
நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது. கண் மருத்துவர்கள், விழிப்பார்வை தேர்வாய்வாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிபுணர்கள் தங்கள் உள்ளூர் சமூகங்களுக்குள் செழித்து வளர வழிகளை உருவாக்குவதன் மூலம் இது, எங்கள் திறமை சுற்றுச்சூழல் அமைப்பையும் வலுப்படுத்துகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம், மேக்சிவிஷன், சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கண் பராமரிப்பு சிகிச்சை வழங்குதலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.” என்றார்.
மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷிபு வர்க்கே கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சமூகங்களுக்கு அதிநவீன, எளிதில் அணுகக்கூடிய கண் பராமரிப்பைக் கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆரம்ப நோயறிதல், தடுப்பு மருத்துவம் ஆகியவற்றில் ஒரு வலுவான கவனம் செலுத்துதல் மூலம், இப்பகுதியின் நீண்டகால நோய் சுமையைக் குறைப்பதற்கும் மற்றும் தமிழ்நாட்டை மருத்துவ சிறப்பு மற்றும் கண் மருத்துவ திறன் வளர்ச்சிக்கான ஒரு மையமாக நிறுவுவதற்கும் நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம். சரியான நேரத்தில் தலையீடு மற்றும் கற்பித்தல் மூலம் நீண்டகால நோய் சுமையைக் குறைக்க உதவுகின்ற இந்த மையங்கள், நீரிழிவு விழித்திரை நோய், கண்புரை மற்றும் க்ளோகோமா போன்ற நிலைமைகளின் ஆரம்ப நோயறிதலுக்கான முதல் தொடர்பு இடங்களாக செயல்படும். ” என்று கூறினார்.
மேக்ஸிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் மருத்துவ மற்றும் கல்வி இயக்குநர் பேராசிரியர் டாக்டர் B. கணேஷ் கூறுகையில், “சென்னை முழுவதும் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனைகளின் இந்த துவக்கமானது, உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை சென்னைப் பெருநகரப் பகுதியின் ஒவ்வொரு மூலையிலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் CSR முயற்சிகளின் ஒரு பகுதியாக கண் மருத்துவர்கள், விழித்திரை தேர்வாய்வாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் துணை மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க பல கல்வி முயற்சிகளை நாங்கள் தொடங்குவோம்” என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான திரு. மகேந்திர சிங் தோனி அவர்கள் கூறுகையில், “சென்னை முழுவதும் இந்த மையங்களைத் தொடங்குவதன் மூலம் மேக்ஸிவிஷன் தனது சேவையை சென்னையில் விரிவுபடுத்தும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பார்வைத் திறனானது, அது மங்கத் தொடங்கும் வரை நாம் பெரும்பாலும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ஒன்றாக இருக்கிறது. மேக்ஸிவிஷன் பற்றி நான் உண்மையிலேயே போற்றுவது என்னவென்றால், அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் அதிநவீன, பிளேடு இல்லாத கண் சிகிச்சைகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பாக இருக்கிறது. SiLK Elita போன்ற கண்டுபிடிப்புகள் மூலம், வாழ்க்கையை மிகத் தெளிவாக, பாதுகாப்பாக மற்றும் நம்பிக்கையுடன் மக்கள் பார்ப்பதற்கு அவர்கள் உதவுகிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான சென்னை நகரத்தில் இந்த பத்து மையங்களைத் திறந்து வைத்து சென்னை மக்களை பயனடையச்செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
சென்னை அதன் மையமாக, மாநில சராசரியை இரட்டிப்பாக்குகிற 40–60% கண்புரை பாதிப்பு இருப்பதாக அறிக்கையிடுகின்றதன் மூலம் தமிழ்நாடு அதிகரித்துவரும் கண் பார்வை சம்பந்தமான சுமையை எதிர்கொள்கிறது. இதற்கு ஒரு அடர்த்தியான, முதியோர் மக்கள் தொகை மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் முக்கிய காரணங்களாக உள்ளன. COVID-19க்கு பிறகு, அதிகப்படியான திரையில் செலவிடும் நேரம் காரணமாக குழந்தைகளின் பார்வை பிரச்சினைகள், வறண்ட கண், கூம்பு வடிவ கருவிழி மற்றும் கண் சோர்வு ஆகியவை பெருகியுள்ளன.
“இந்தியாவின் மருத்துவ தலைநகரம்” ஆக, திறமையான கண் மருத்துவர்களுக்கான எளிதான அணுகலை வழங்குகின்ற சென்னை, தென்னிந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலிருந்தும் நோயாளிகளை ஈர்க்கிறது. மேக்ஸிவிஷனின் மூலோபாய விரிவாக்கம், இந்த அதிக தேவை உள்ள மக்களுக்கு அதிநவீன கண் பராமரிப்பை நெருக்கமாகக் கொண்டுவருகிறது, சரியான நேரத்தில் தலையீட்டை அதிகரிக்கிறது, பிராந்திய உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது மற்றும் சென்னை, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தெலுங்கானா முழுவதும் உடல்நலப் பராமரிப்பு வேலைவாய்ப்பை வளர்க்கிறது.
‘திட்டம் வெளிச்சம்’ தொடங்குவதற்கு மாநிலம் முழுவதும் கண் பராமரிப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்த நான்கு ஆண்டுகளில் ₹400 கோடியை உறுதி செய்கின்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுடன் மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் கையெழுத்திட்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மேக்ஸிவிஷன் 30-க்கும் மேற்பட்ட கண் மருத்துவமனைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பார்வை மையங்களை நிறுவ உள்ளது. இத்திட்டம் பின்தங்கிய பகுதிகளுக்கு மேம்பட்ட, மலிவு விலையிலான கண் சிகிச்சை சேவைகளை வழங்குவதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் கண் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.
மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பற்றி:
டாக்டர் காசு பிரசாத் ரெட்டி அவர்களால் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, பின்னர் 2011 ஆம் ஆண்டில் டாக்டர் GSK வேலு அவர்களால் கையகப்படுத்தப்பட்ட மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் இந்தியாவின் முதன்மையான மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் கண் பராமரிப்பு சங்கிலிகளில் ஒன்றாக உள்ளது. உயர்தர மற்றும் மலிவு விலையில் கண் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் மேக்ஸிவிஷன் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.
1996 இல் அது தொடங்கப்பட்டதிலிருந்து, 6 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு பெருமையுடன் சேவை செய்துள்ளது. தற்போது, தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான வளர்ச்சியுடன் 65 க்கும் அதிகமான மருத்துவமனைகள், 30 க்கும் மேற்பட்ட பார்வை மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்குவதற்கு இந்த வலையமைப்பு விரிவடைந்துள்ளது.
மேக்ஸிவிஷன் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் அதன் மருத்துவமனைகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது, இப்போது மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது. சூப்பர் டெரிட்டியரி சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ், டெரிட்டியரி கேர் ஐ ஹாஸ்பிடல்ஸ், செகண்டரி கேர் ஐ ஹாஸ்பிடல்ஸ், பிரைமரி ஐ சென்டர்ஸ் மற்றும் விஷன் சென்டர்ஸ் ஆகிய நான்கு தனித்துவமான பராமரிப்பு மாதிரிகளைக் கொண்ட ஒரு விரிவான அணுகுமுறையை மேக்ஸிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் பயன்படுத்துகிறது. மேக்ஸிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் மிகவும் நவீன மற்றும் தீவிர கண் பராமரிப்பு சேவைகளை வழங்க தயாராக உள்ளது.
www.maxivisioneyehospital.com