October 17, 2025
  • October 17, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் நடிப்பில் அசந்து அவரை அலேக்காக தூக்கிய வர் யார் – மாஸ்டர் அப்டேட்ஸ்
August 8, 2020

விஜய் நடிப்பில் அசந்து அவரை அலேக்காக தூக்கிய வர் யார் – மாஸ்டர் அப்டேட்ஸ்

By 0 724 Views

தியேட்டரில்தான் ரிலீஸாக வெண்டும் என்ற பட்டியலில் முதலில் இருக்கும் மாஸ்டர் படம் குறித்து வாரமிரு புது செய்தியை பரப்பி லைம் லைட்டில் இருக்க ஒரு டீம் அமர்த்தப்பட்டிருக்குதாம்.. 

அந்த வகையில் நேத்திக்கு வந்த மாஸ்டர் பீஸ் நியூஸ் :

இப்படத்தில் வேலை செய்தது பற்றி ஸ்டண்ட் சில்வா “மாஸ்டர் படத்தில் 6 சண்டைக் காட்சிகள் உள்ளது. முதன் முதலில் நான் விஜய் அவர்களை ஆதி படத்தின் சூட்டிங்கின் போது பார்த்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார்.

அதே அன்பு, அதே பாசம். மாஸ்டர் ஒரு லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும், மேலும் சண்டைகள் யதார்த்தமாக இருக்கும். சண்டை காட்சிகள் கதையுடன் ஒன்றி இருக்கும்.

மாஸ்டர் படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் போது விஜய் அவர்களுக்கு முதுகில் ஒரு சிறிய பிரச்னை இருந்தது. முதலில் ஒரு சண்டைக் காட்சியை அவரிடம் கூறினேன். பிறகு அதில் சில மாற்றங்களை செய்து எளிதாக்கினேன். ஆனால் நான் முதலில் சொன்னதை செய்து காட்டி அசத்தினார். அவர் அதை செய்ததை பார்த்தவுடன் நான் உற்சாகத்தில் ஓடிச்சென்று அவரை தூக்கி கொண்டாடினேன்..!

டெயில்பீஸ் நியூஸ்…

விஜய் யின் உறவினரும் ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகளுமான சினேகா பிரிட்டோவிற்கும், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷிற்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களின் திருமணம் வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம்.