January 12, 2026
  • January 12, 2026
Breaking News
December 31, 2019

மாஸ்டர் படத்தில் விஜய் குடிகாரர் ஆக வருகிறாரா?

By 0 794 Views

இன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சி விஜய் ரசிகர்கள் கொண்டாடிய விஷயம் தளபதி 64 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது தான்.

மாஸ்டர் என்ற அந்த தலைப்புடன் விஜய் 64 படத்தின் முதல்பார்வை வெளியானது. ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக் கில் விஜய் முகம் சற்றே கலங்கியது போல் தோன்றுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் படம் சரியாக அச்சாகவில்லையோ என்று பலரும் முதலில் நினைத்தார்கள் ஆனால் திட்டமிட்டபடி தான் அப்படி விஜய் முகம் கலங்கியவாறு இருப்பதா க வைக்கப்பட்டுள்ளதாம்.

அது ஏன் என்றால் முதல் பாதியில் கல்லூரி உதவி பேராசிரியராக வரும் விஜய் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பாராம். அதனால் போதையில் அவரது முகம் அப்படி கலங்கி இருப்பதாக இருக்கிறது என்று ஒரு தகவல் வெளியாகி ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

Master first look news

Master first look news

விஜய் தன் படங்களின் இதுவரை போதையுடன் நடித்ததாக நமக்கு நினைவு இல்லை. இந்தப் படத்தில் அப்படி நடிப்பாரா என்றும் தெரியவில்லை.

அப்படியே நடித்திருந்தாலும் அவரது போதையை ஃபர்ஸ்ட் லுக் கில் கொண்டுவர இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்து இருப்பாரா என்பதும் தெரியவில்லை. அதற்கு விஜய் ஒத்துக்கொள்ளும் சாத்தியமும் இல்லை.

ஆக இந்த பர்ஸ்ட் லுக் கான காரணத்தை லோகேஷ் கனகராஜ் ஏதாவது சந்தர்ப்பத்தில் வெளியிட்டால் தான் நமக்கு தெரியவரும்.

அதுவரை யார் யாருக்கு என்ன தோன்றுகிறதோ அவர்கள் அதைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்..!