October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழில் மாயோன் வெற்றி – தெலுங்கில் பிரமாண்டமாக வெளியிட திட்டம்
June 26, 2022

தமிழில் மாயோன் வெற்றி – தெலுங்கில் பிரமாண்டமாக வெளியிட திட்டம்

By 0 384 Views

தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். 

தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன். 

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்குவில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தை பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என படத்தை 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை போலவே தெலுங்கிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.