October 19, 2025
  • October 19, 2025
Breaking News
September 6, 2019

பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார்

By 0 1504 Views
Lyricist Muthu Vijayan passes Away

Lyricist Muthu Vijayan passes Away

அஜித், விஜய், விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்டு தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 48.

 
‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’, ‘மேகமாய் வந்துபோகிறேன்…’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த கவிஞர்.முத்துவிஜயன். பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.
 
மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்துவிஜயன் இன்று மாலை 4 மணிக்கு காலமானார். சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெற்றது
 
கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற முத்துவிஜயன் சமீபகாலமாக தழிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்தார்.
 
இளம் பாடலாசிரியர்களில் அண்ணாமலை, நா.முத்துக்குமார்… இப்போது முத்துவிஜயன் என்று அடுத்தடுத்து பாடலாரியர்கள் இறப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தருகிறது.