January 24, 2026
  • January 24, 2026
Breaking News
February 20, 2022

பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்

By 0 717 Views

பிரபல திரைப்பட பாடலாசிரியர் திரு. லலிதானந்த், உடல்நிலை குறைவால் இன்று ஞாயிற்று கிழமை (20-02-2022) மதியம் 3:35 மணிக்கு காலமானார். 

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் “என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர்.

அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தமிழ் சினிமா உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.

மேலும் இவர் கோகுல் இயக்கத்தில் ரௌத்திரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், கார்த்தி நடிப்பில் காஸ்மோரா, விஜய்சேதுபதி நடித்த ஜூங்கா, சேரனின் இயக்கத்தில் திருமணம், அன்பிற்கினியாள் போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இவரது பாடல் வரிகளில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் உட்பட இன்னும் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

லெமூரியாவில் இருந்த காதலி வீடு, ஒரு எலுமிச்சையின் வரலாறு, என்ற இரு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்..!