kushbu support Rajini
Shobana Ravi
ரஜினி பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்தி என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள், வழக்கு தொடரச்சொல்லி கோரிக்கை உள்பட பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், இன்னொரு பக்கம் ஆதரவுக்குரலும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படி ரஜினிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு அதனது ட்விட்டர் பக்கத்தில் பேசினாலும், அவர் பேசியது சரி என்று நியாயப்படுத்தவில்லை. யாருக்குமே அவரவர்கள் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு என்ற நியாயமான விஷயத்தை முன்னெடுத்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
ஆனால், முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவியோ ஒரு படி முன்னால் போய் ரஜினி பேசியதெல்லாம் சரி என்றே சொல்லியிருக்கிறார். “ராமருக்காகவும், சீதைக்காகவும் நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள். நீங்கள் மன்னிப்புக் கேட்க அவசியமில்லை…” என்றே கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இன்றும் ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் கழகத்தினர் செம்மொழி பூங்கா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.