December 20, 2025
  • December 20, 2025
Breaking News
March 16, 2020

சட்டசபை வந்த உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

By 0 739 Views
இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.
 
சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள்  அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.
 
தமிழகத்தில் கொரோனா வைரசால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அவருக்கு தற்போது நோய் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.