January 9, 2025
  • January 9, 2025
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • மாரடைப்புக்கான சிகிச்சை தொடங்கும் கால அளவில் உலக அளவை முந்திய காவேரி மருத்துவமனை வடபழனி
January 8, 2025

மாரடைப்புக்கான சிகிச்சை தொடங்கும் கால அளவில் உலக அளவை முந்திய காவேரி மருத்துவமனை வடபழனி

By 0 32 Views

டிசம்பர் 2024 – ல் மாரடைப்பிற்கான சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க சாதனைப்பதிவை செய்திருக்கும் காவேரி மருத்துவமனை வடபழனி

சென்னை: 8 ஜனவரி 2025: இதயத் தமனியில் அடைப்பின் காரணமாக, இதயத்தின் கீழ்ப்புற அறைகளை முக்கியமாக பாதிக்கின்ற மாரடைப்பிற்கான (STEMI) சிகிச்சை மேலாண்மையில் டிசம்பர் 2024-ன்போது தொடர்ச்சியாக நல்ல சிகிச்சை விளைவுகளுடன் பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதை அறிவிப்பதில் காவேரி மருத்துவமனை வடபழனி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 15 STEMI பாதிப்பு நேர்வுகளுக்கு இம்மருத்துவமனை சிகிச்சையளித்திருக்கிறது. அதாவது, சராசரியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு நோயாளிக்கு உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு நேர்வுக்கு சிகிச்சையளித்திருப்பது இத்துறையில் காவேரி மருத்துவமனையின் நற்பெயருக்கு வலு சேர்த்து நேர்த்தியான சான்றாக திகழ்கிறது.

டிசம்பர் மாதத்தில் மாரடைப்பு நேர்வில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளைப் பொறுத்தவரை 15 நபர்களில் 8 நபர்களுக்கு வலது கரோனரி தமனி (RCA) முதன்மை காரணியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. IWMI என அழைக்கப்படும் கீழ்ப்புற சுவர் இதயத் தசைத்திசு இறப்பு, மாரடைப்பு நிகழ்வில் அதிகம் காணப்பட்ட வடிவமாக இருந்திருக்கிறது.

இந்த பருவகால போக்கு, முந்தைய ஆண்டுகளிலும் இதேபோல இருந்தது அறியப்பட்டிருப்பதால், குளிர்கால மாதங்களின் போது WMI நேர்வுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது. இந்த காலத்தின்போது அதிகரித்திருக்கின்ற இடர்வாய்ப்பு இருப்பதை உணர்ந்திருக்கும் காவேரி மருத்துவமனை, நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள விளைவுகளுக்காக உரிய நேரத்தில் இடையீட்டு சிகிச்சையை வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு விழிப்புணர்வுடன் தயார்நிலையில் இருக்கிறது.

மருத்துவமனைக்குள் நோயாளி அனுமதிக்கப்படுவதிலிருந்து ஆஞ்சியோபிளாஸ்ட்டி இடையீட்டு சிகிச்சையை தொடங்குவதற்கு எடுக்கும் Door-to-Balloon (D2B) நேரத்தில் எட்டப்பட்டிருக்கும் முன்னேற்றம் இந்த மாதத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. உலகளவில் இதற்கான நேரம் 90 நிமிடங்களாக இருக்கின்ற நிலையில் அதைவிட கணிசமாக குறைந்த நேரமான வெறும் 49 நிமிடங்கள் என்ற சராசரி காலஅளவே காவேரி மருத்துவமனையில் D2B நேரமாக இருக்கிறது.

இதன்மூலம் ஒரு புதிய தரஅளவுகோலை காவேரி மருத்துவமனை வடபழனி நிறுவியிருக்கிறது. இதய தசை சேதத்தைக் குறைப்பதற்கும் மற்றும் உயிர்பிழைப்பு விகிதத்தை மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததான குருதித் தடையை அகற்றி இரத்த ஓட்டத்தை மீண்டும் நிலைநாட்டுகின்ற சிகிச்சைக்கான காலஅளவை கணிசமாக குறைத்து மாரடைப்பு (STEMI) நோயாளிகளுக்கு விரைவாகவும், திறம்படவும் உயிர்காக்கும் சிகிச்சை இங்கு வழங்கப்படுவதை இச்சாதனை வெளிப்படுத்துகிறது.

மாரடைப்பிற்கான சிகிச்சை மேலாண்மையில், காவேரி மருத்துவமனையின் அணுகுமுறையின் முக்கிய அடிக்கல்லாக முதன்மை (பிரைமரி) ஆஞ்சியோபிளாஸ்ட்டி இருந்து வருகிறது. சருமத்தின் வழியாக இதயச்சிரை இடையீட்டு முதன்மை (PCI) எனவும் அறியப்படும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பாதிப்பு அறிகுறிகள் தோன்றியதற்குப் பிறகு மிக முக்கியமான சாளர காலஅளவிற்குள் மருத்துவமனைக்கு வரும் STEMI நோயாளிகளுக்கு தங்க தர வழிமுறையாக இருக்கிறது. மருந்துகளின் மூலம் இரத்த உறைவை சிதைக்கின்ற சிகிச்சையைப் போல் அல்லாமல், ஒரு கதீட்டர் மற்றும் பலூனைப் பயன்படுத்தி, அடைப்பு ஏற்பட்டுள்ள கரோனரி தமனிகளை இயற்பு இயக்க முறையில் திறந்து, இரத்தஓட்டத்தை திரும்பவும் ஏற்படுத்துவதே முதன்மை ஆஞ்சியோபிளாஸ்ட்டியின் நோக்கமாகும். இதைத் தொடர்ந்து, அகலத்திறந்த நிலையில் தமனி இருப்பதைத் தொடர்ந்து பேணுவதற்காக ஒரு ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது.

காவேரி மருத்துவமனையின் ஆஞ்சியோபிளாஸ்ட்டி செயல்முறைகளுக்கு மேம்பட்ட இமேஜிங் சாதனங்கள், உயர்தர ஸ்டென்ட் தொழில்நுட்பம் உட்பட, மிக நவீன தொழில்நுட்பத்தின் ஆதரவு பெரிதும் உதவுகிறது. நோயாளிகளுக்கு வரக்கூடிய சிக்கல்கள் மிகக்குறைவாக இருப்பதற்கும், வேகமாக மீண்டு இயல்புநிலைக்கு திரும்பவும் இவை கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவினரின் நிபுணத்துவம் மற்றும் இங்கு நிறுவப்பட்டுள்ள நவீன சாதனங்களின் உதவியினால் தமனி மீண்டும் குறுகுவது மற்றும் ஸ்டென்ட்களில் குருதிநாளக் கட்டி போன்ற சிக்கல்கள் கணிசமாக குறைந்திருப்பது அறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் STEMI பாதிப்புள்ள நோயாளிகளின் உயிர்பிழைப்பு விகிதம் சிகிச்சை தொடங்கப்படும் நேரம் மற்றும் பெறப்படும் சிகிச்சையின் வகையைச் சார்ந்து கணிசமாக மாறுபடுகின்றன. STEMI நோயாளிகளுக்கு மருத்துவமனையில் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 5% முதல் 15% வரை இருக்கிறது. மேம்பட்ட இதய சிகிச்சை வசதிகள் கொண்ட நகர்ப்புற மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை விளைவுகள் கிடைப்பது காணப்படுகிறது.

மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து முதல் 90 நிமிடங்களுக்குள் தொடங்கப்பட்டிருக்குமானால், முதன்மை ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையை மேற்கொள்ளும் STEMI நோயாளிகளில் 90 சதவிகிதத்தினர் குறைந்தது ஓராண்டு வரை உயிர் வாழ்கின்றனர்; இரத்த உறைவை கரைக்கும் சிகிச்சையைப் பெறும் நோயாளிகள், அதுவும் குறிப்பாக காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு வருபவர்களில் மருத்துவமனையில் உயிரிழப்பு விகிதம் 10% முதல் 15% சிகிச்சை வரை இருக்கிறது. விரைவாக இடையீட்டு சிகிச்சையைத் தொடங்குவது மிக முக்கியம். மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து 60 நிமிடங்களுக்குள் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையை தொடங்கும் மருத்துவமனைகளில் உயிரிழப்பு விகிதமானது, இடையீட்டு சிகிச்சைக்கு நீண்டநேரம் எடுக்கும் மருத்துவமனைகளோடு ஒப்பிடுகையில் 5% குறைவாக இருக்கிறது.

காவேரி மருத்துவமனையின் இதய செயலிழப்பு மற்றும் உறுப்புமாற்று செயல்திட்டத்தின் கிளினிக்கல் லீடு மற்றும் முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் புரொஃபசர் P. மனோகர், இம்மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை நெறிமுறைகளை மேம்படுத்தியிருப்பதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். நோயாளிகளுக்கான சிகிச்சை நடைமுறைகளை நெறிப்படுத்துவதிலும் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி செயல்முறைகளை சிறப்பாக்குவதிலும் இவரது முயற்சிகள் இம்மருத்துவமனையின் பிரமிக்கத்தக்க D2B காலஅளவை எட்டுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. இதன்மூலம் நோயாளிகளுக்கு சிறப்பான விளைவுகள் உறுதி செய்யப்படுகின்றன.

நகரின் மையப்பகுதியான வடபழனியில், இம்மருத்துவமனை அமைந்திருப்பது, அவசர நிலை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. அவசரநிலை சிகிச்சை ஊர்திகள் மருத்துவமனையை விரைவாக சென்றடைவதற்கு இதன் அமைவிட வசதி வழி வகுத்திருக்கிறது. காலம் தாழ்த்தாமல், உடனடி சிகிச்சை தொடங்க வேண்டிய மாரடைப்பு நேர்வுகளில் இது பெரிதும் உதவுகிறது. உயிருக்கு ஆபத்தான தருணங்களில், உடனடி சிகிச்சையை நோயாளிகள் பெறுவதை உறுதிசெய்ய 24/7 அவசரநிலை சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கு நகரின் மையப்பகுதியில் காவேரி மருத்துவமனை அமைந்திருப்பது வசதியாக இருக்கிறது.

காவேரி மருத்துவமனையின் இதய செயலிழப்பு மற்றும் உறுப்புமாற்று செயல்திட்டத்தின் கிளினிக்கல் லீடு மற்றும் முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் புரொஃபசர் P. மனோகர் இது தொடர்பாக கூறியதாவது: “எமது D2B காலஅளவில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றம், எமது ஒட்டுமொத்த குழுவினரின் திறனையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. மாரடைப்பு | STEMI -க்கான சிகிச்சையில், ஒவ்வொரு நொடியும் முக்கியமானது; தாமதமின்றி சிறந்த சிகிச்சையை எமது நோயாளிகள் பெறுவதற்காக எமது செயல்முறைகளை நெறிப்படுத்தி, மேம்படுத்த நாங்கள் கடுமையாகவும், தளர்வின்றியும் பணியாற்றியிருக்கிறோம். D2B காலஅளவை 49 நிமிடங்களாக குறைத்திருக்கும் எமது திறன் ஒரு முக்கிய மைல்கல் சாதனையாகும். எமது நோயாளிகள் அனைவருக்கும் மிக உயர்ந்த தரத்திலான இதய சிகிச்சையை வழங்குவதில் எங்களது உத்வேகமும், அர்ப்பணிப்பும் இனியும் தீவிரமாக தொடரும்.”

இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணர் மற்றும் குருதிக்குழாய் சிறப்பு மருத்துவராக டாக்டர். C. சுந்தர் பேசுகையில், “இம்மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதியும், தீவிர சிகிச்சை, கேத் லேப் மற்றும் அவசர நிலை இதய இடையீட்டு சிகிச்சை உட்பட, இதயவியல் சேவைகளுக்கான

எமது நோயாளிகள் பெறுவதற்காக எமது செயலமுறைகளை நெறிப்படுத்தி, மேம்படுத்த நாங்கள் கடுமையாகவும், தளர்வின்றியும் பணியாற்றியிருக்கிறோம். D2B காலஅளவை 49 நிமிடங்களாக குறைத்தி18:03 எமது திறே ய Vமைலீகல் Vo சாதனைக்கும். மீது நோ0.58% அனைவருக்கும் மிக உயர்ந்த தரத்திலான இதய சிகிச்சையை வழங்குவதில் எங்களது உத்வேகமும், அர்ப்பணிப்பும் இனியும் தீவிரமாக தொடரும்.”

இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணர் மற்றும் குருதிக்குழாய் சிறப்பு மருத்துவராக டாக்டர். C. சுந்தர் பேசுகையில், “இம்மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதியும், தீவிர சிகிச்சை, எமது மருத்துவர்கள் குழு நாள் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் நிலையும், சென்னையில் மாரடைப்பு நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைக்கு உரிய முதன்மை மருத்துவமனையாக காவேரி மருத்துவமனையை நிலைநிறுத்தியிருக்கிறது. எமது அர்ப்பணிப்பு மிக்க அணுகுமுறையின் மூலம் இதய சிகிச்சையில் நாங்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறோம் மற்றும் குணமடைந்து இயல்புநிலைக்குத் திரும்புகின்ற ஒவ்வொரு நோயாளியின் பயணத்தையும் மேம்படுத்துவதில் எமது செயல்திறனைப் பயன்படுத்துகிறோம்.” என்று கூறினார்.

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், இம்மருத்துவமனையின் சாதனைகள் குறித்து தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி கூறியதாவது: “எமது குழுவின் பிரமாதமான செயல்திறனானது, இந்த சிறப்பான சிகிச்சை விளைவுகளில் தெளிவாக வெளிப்படுகிறது. எமது D2B காலஅளவில் எட்டப்பட்டிருக்கும் முன்னேற்றமானது, எமது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்களின் கடும் உழைப்பு மற்றும் ஒத்துழைப்பின் ஒரு நேரடி விளைவாகும். மிக விரைவாகவும் மற்றும் அதிக திறமையாகவும் இதய இடையீட்டு சிகிச்சைகளை வழங்கி, உயிர்களை காப்பாற்றுவதில் நமது மனஉறுதியையும், அர்ப்பணிப்பையும் இது முன்னிலைப்படுத்துகிறது. இதுவரை நாங்கள் நிகழ்த்தியிருக்கும் முன்னேற்றங்கள், சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில், இனிவரும் காலங்களிலும் புதிய சாதனைகளையும், தர அளவுகோல்களையும் நிறுவும் எமது பணி தொடரும்.”

நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக, உயிருக்கு ஆபத்தான இதய பிரச்சனைகளினால் அவதியுறுகின்ற நபர்களுக்கு மிக உயர்ந்த தரத்திலான சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவதில் தனது குறிக்கோளாக கொண்டு காவேரி மருத்துவமனை வடபழனி செயல்படுகிறது. மாரடைப்பிற்கான சிகிச்சை மேலாண்மையில், மேன்மை நிலைக்கான இம்மருத்துவமனையின் வாக்குறுதியானது, சிகிச்சை காலஅளவுகளை மேம்படுத்துவதிலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் மற்றும் பயனளிக்கும் இடையீட்டு சிகிச்சைகளை நோயாளிகள் உடனடியாகப் பெறுவதை உறுதி செய்வதிலும் அது காட்டும் சிறப்பு கவனத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.