January 15, 2025
  • January 15, 2025
Breaking News
June 12, 2018

அக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி

By 0 1426 Views

சூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன், இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ், சூரி என அனைவரும் வேட்டி சட்டையிலும், சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் பொன்றோர் பட்டுப்புடவையிலுமாக பாரம்பரிய உடையில் வந்திருந்தது கவனிக்க வைத்தது.

Kadaikkutti Singam

Kadaikkutti Singam

நிகழ்வில் கார்த்தி பேசியதிலிருந்து…

“பட்டணத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். படப்பிடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் திட்டமிட்டு சரியாக செய்து முடித்தார். இந்தப் படத்துக்காக அவர் 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது.

இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளன. நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன்.

நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அடிதான் கிடைக்கும்..!”

Kadaikkutti Singam

Kadaikkutti Singam

தொடர்ந்து சூர்யா பேசியதிலிருந்து…

“விரைவில் நாணும், கார்த்தியும் இணைந்து நடிப்போம். எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இந்தப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது.

நாங்கள் குழந்தையாக இருக்கும் போது சத்யராஜ் மாமா வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கித் தந்தார். இப்போது சத்யராஜ் மாமா நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு..!”