December 2, 2025
  • December 2, 2025
Breaking News
April 29, 2019

10 நாள் காஞ்சனா 3 வசூல் 130 கோடி+வேதிகா டான்ஸ் வீடியோ

By 0 1047 Views
ராகவா லாரன்ஸ் நடிப்பு இயக்கத்தில் உருவான காஞ்சனா 3, ஏப்ரல் 19 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
 
சரியாக கோடை விடுமுறையைக் குறிவைத்து வந்ததால் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. முதலில் முடிவடைந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறதாம்.
 
இன்னும் இதற்குப் போட்டியாக ஒரு படமும் வெளியாகாத நிலையில் இன்னும் பல கோடிகளை இந்த விடுமுறைக்குள்ளேயே காஞ்சனா 3 அள்ளிவிடும் என்று நம்பலாம்.
 
‘பேயோட்டம்’கிறது இதுதானா..? படப்பிடிப்பில் தான் ராகவா லாரன்ஸுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை வேதிகா ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அது கீழே… அதையும் பாருங்க. இந்த மேட்டருக்கு மேட்ச் ஆக இருக்கும்..!