June 20, 2025
  • June 20, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கோடையை குளிர்விக்க ஓவியா வேதிகாவுடன் வருகிறார் ராகவா லாரன்ஸ்
November 13, 2018

கோடையை குளிர்விக்க ஓவியா வேதிகாவுடன் வருகிறார் ராகவா லாரன்ஸ்

By 0 1033 Views
oviya

oviya

ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் சினிமாவில் ஒரு படத்தின் நான்காவது பாகத்தையும், இன்னொரு படத்தின் மூன்றாவது பாகத்தையும் இணைத்து இந்தக் கோடை விடுமுறைக்குக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ்.

கோடை விடுமுறையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட இந்தப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இளசுகளுக்காக படத்தில் இருக்கவே இருக்கீறார்கள் ஓவியாவும், வேதிகாவும்.

Vedhika

Vedhika

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படம்தான் அது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர. பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..!

முனி 3 – காஞ்சனா 2 படம் கடந்த கோடையில் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது நினைவிருக்கலாம்..!