2பாய்ண்ட்O படம் வெளியீட்டுக்கு வந்து விட்டதால் இனி அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 ல் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
shankar
இதில் கமல் நடிக்க, அவருடன் நடிக்கவிருக்கும் நடிக நடிகையரின் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி ஒரு கேரக்டரில் துல்கர் சல்மான் நடிப்பார் என்பது தெரிகிறது.
கமலுடன் முக்கியக் கேரக்டரில் நடிக்க சிம்புவை அழைத்திருக்கிறார் ஷங்கர் என்கிறார்கள். ஏற்கனவே ஒருமுறை ‘நண்பன்’ படத்தில் நடிக்க சிம்புவை ஷங்கர் அழைக்க அவர் நடிக்க முடியாதது தெரிந்த விஷயம்.
simbu
அதனால் இந்த முறையும் சிம்பு தன் அழைப்பைத் தட்டிக் கழித்தால் அவமானம் என்று கருதிய ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத்திடம் தன் எண்ணத்தைச் சொல்ல அவர் தலையிட்டு சிம்புவை இந்தியன் 2 வுக்கு உள்ளே அழைத்து வந்தார் என்று தகவல்.
‘அனிருத்’ தான் இந்தியன் 2 படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.
சிம்பு நடிக்காவிட்டால் ஷங்கருக்கு இழப்பில்லை. ஆனால், சிம்புவுக்கு கண்டிப்பாக இழப்புதான்..!