‘முதல் இந்து தீவிரவாதி’ பற்றிய பேச்சினால் சர்ச்சையில் கமல் சிக்கியதிலிருந்து தினமும் அது அதன் விளைவுகளை அவர் அனுபவித்தே வருகிறார். அது பற்றிய காரசார விவாதங்கள் ஒரு புறமும், நேரில் செருப்பு, முட்டை வீசுபவர்கள் இன்னொரு புறமுமாக அவரைக் குறிவைக்க… அதில் எரிச்சலடைந்த கமல் இன்று காட்டமாகவே தன் ட்விட்டரில் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அது வருமாறு…
“சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.
மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.
12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம்.
ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.
நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாகக்’ கொள்வது எத்தகைய அறியாமை…
நாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.
நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.
புரியலன்ற சோமாரிகளுக்கு….
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.
‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! ‘தமிழா’ நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்..!”
இதுவாவது புரியுதா திருவாளர் சோமா….?!
Related