தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், அரசு தரப்பில் யாரும் தூத்துக்குடி மக்களைச் சந்திக்காத்தைக் குற்றம் சாட்டினார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்துக் கேள்வி எழுந்தபோது, “இந்தப் பதவிநீக்கம் போதாது, மேலே இருக்கும் இருவர்… அதாவது முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும். சொல்லப்போனால் அரசே விலக வேண்டும்..!” என்றார்
௳எலும், “மக்களை வழிநடத்துவது மற்றும் அவர்கள் வாழ்க்கை இன்னும் ஏதுவாக நடத்துவதற்கு உதவி செய்வதற்கே இரு அரசுகளும் இருக்க… ராணுவத்தை அனுப்பி எங்கள் வாழ்க்கையை சரிப்படுத்த முற்படுத்துவது, நியாயமான அரசு பரிபாலனமாக இருக்க வாய்ப்பில்லை..!’ என்றார்.