January 25, 2026
  • January 25, 2026
Breaking News
June 6, 2024

கல்கி 2898 கிபி டிரெய்லர் ஜூன் 10, 2024 இல் வெளியாகிறது!

By 0 361 Views

இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது.

அமேசான் பிரைமில் புஜ்ஜி & பைரவா என்ற தலைப்பில், படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் அனிமேசன் வீடியோ வெளியான பிறகு, உலகம் முழுவதிலும் இப்படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கம், புதன்கிழமை காலை டிரெய்லர் வெளியீட்டு செய்தியைப் பகிர்ந்து கொண்டது:

“ஒரு புதிய உலகம் காத்திருக்கிறது

#Kalki2898AD டிரெய்லர் ஜூன் 10 முதல்.”

https://x.com/kalki2898ad/status/1798210288849940678?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q

டிரெய்லர் வெளியீட்டு தேதி, சுவாரஸ்யமான ஒரு புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது, அந்த போஸ்டரில், ஒரு மலையின் உச்சியில் பைரவவான பிரபாஸ் நிற்கிறார், “எல்லாம் மாறப்போகிறது” என்ற வாசகம் அதில் உள்ளது.

கல்கி 2898 கிபி படத்தில், இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.