September 1, 2025
  • September 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படம் கைதி கேலரி
October 12, 2019

தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படம் கைதி கேலரி

By 0 1885 Views

தீபாவளிக்கு வெளியாவதாக மூன்று படங்கள் சொல்லப்பட்டன. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதி நடிக்க, விஜய்சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ இவை மூன்றும்தான் அந்தப் படங்கள்.

இதில் ஏற்கனவே வெளியாக அநேக சாத்தியங்கள் இருந்தும் தீபாவளிக்காக ஒத்தி வைத்த ‘சங்கத் தமிழன்’ வெளியாக வாய்ப்பில்லையென்று படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சொல்லிவிட, அரசியல் பின்னணி சிக்கல்களால் ‘பிகில்’ வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் ‘கைதி’ மட்டுமே தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படமாக இருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கீழே படத்தின் புகைப்பட கேலரி…

(1)

Image 1 of 8