October 18, 2025
  • October 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கமல் பலான படங்களில் நடித்ததை காட்டிக் கொடுத்த காதல் சுகுமார்
October 13, 2020

கமல் பலான படங்களில் நடித்ததை காட்டிக் கொடுத்த காதல் சுகுமார்

By 0 785 Views

இரண்டாம் குத்து படத்தில் நடித்த சாம்ஸ் ” இனி இதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன்…” என்று சொன்ன பதிவுக்கு இன்னொரு காமெடி யன் காதல் சுகுமார் தன் முகநூலில் ஒரு பதிவு இட்டிருக் கிறார். அதிலிருந்து…

இனிய நண்பர் Actor-Chaams அவர்களின் பதிவுக்காக…

” நண்பா காமெடியன்னு ஒருத்தன் இல்ல. நடிகன் நடிகன்தான்…”அப்டின்னு கமல் சார் சொல்லுவார். என்னவா ஆகப்போறோம்னு தெரியாத ரெண்டும் கெட்டான் ஸ்டேஜ்ல 20க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்காவில் ஷீலா போன்ற பலான படங்களில் நடித்ததாக கமல் சாரே என்னிடம் கூறியிருக்கிறார்.

அதில் சில உங்க குழாயில் காணக் கிடைக்கிறது (YouTube 😜) பாருங்க நேரடியா மொழிபெயர்த்தா எப்படி வருகிறது என்று)இது நமக்குத் தொழில்..”கதைக்குத் தேவைப்பட்டால்” என கதாநாயகிகள் போல மாறிவிடலாம்.

நானேயோகா டீச்சர் “போன்ற (வினிதா கதாநாயகி) வி.சி குகநாதன் சார் இயக்கத்தில் வந்தது) படங்களில் நடித்திருக்கிறேன். “இது போன்ற படங்களில் நடிக்காதீர்கள் சார்..நான் வேண்டுமானால் உங்களுக்கு நீங்கள் கேட்கும் பணத்தைத் தந்து விடுகிறேன்” என்று மிஸ்டர் பொதுஜனத்தில் ஒருத்தர் சொல்லட்டும். நான் நடிப்பதை விட்டு விடுகிறேன்.

என் போன்ல ஒரு ஆபாச படத்தைக் கூட நான் பார்த்ததில்லை என ஒரு யோக்கியர் சொல்லட்டுமே பார்ப்போம். பாலும் விசமும் கையில்தான் இருக்கிறது. எதைக் குடித்தால் வாழ்வு எதைக் குடித்தால் சாவு என்று ஒருவருக்குத் தெரியாதா என்ன.!?. எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.

அதற்காக இயக்குனருக்கு நான் குடை பிடிக்கவில்லை. நான் செய்ய மாட்டேன். அவ்வளவுதான் என்ன உங்களுடைய முடிவு வரவேற்கத்தக்கதே.நீங்கள் செய்யாவிட்டால் வேறொருவர் செய்யப்போகிறார். அவ்வளவுதான்.

புறக்கணிப்புதான் ஒருவருக்கு மாபெரும் தண்டனை.அதை மக்கள் செய்தால் மறுபடி அவர் இப்படி படம் எடுப்பதை நிறுத்தப் போகிறார் அவ்வளவுதான்.முதல் குத்தை வரவேற்றதால் அவர் இரண்டாம் குத்தை விட்டிருக்கிறார்..இப்படியே ஒம்போது குத்துக்கள் அவரை போகவிட்டு விடுவார்கள் பாருங்கள்..!”