April 19, 2025
  • April 19, 2025
Breaking News
December 25, 2019

கேப்மாரி ஹீரோ பெயரையும் மாற்றுகிறாரா..?

By 0 730 Views

சென்னை 28, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்து எடுத்த நல்ல பெயரை ‘கேப்மாரி’ என்ற கேவலமான படத்தில் நடித்து கெடுத்துக்கொண்ட ஜெய், சமீபத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்த மதத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் அப்படி மதம் மாறியதாகக் கூறியிருக்கும் ஜெய், ஏழு வருடங்களாக அதைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

சிம்புவுக்குத் தம்பி போல் அவ்வப்போது பிரச்சினை மற்றும் காதலில் சிக்கும் வழக்கமுள்ள இவர், மத மாற்றம் மற்றும் மன மாற்றத்தாலோ என்னவோ சமீப காலமாகத் தன் பாதையை திட்டமிட்டு நடந்து வருவது பாராட்டுக்குரியது. 

இதற்கிடையில் மதம் மாறி விட்டதால் தன்பெயரை ‘அஜீஸ் ஜெய்’ என்று மாற்றலாமா என்று யோசித்து வருகிறாராம்.

நல்ல பெயர்…நல்ல முடிவுதான்… ஆனால், ‘கேப்மாரி’ போல் படங்களை ஒத்துக்கொண்டு எப்படி அவர் நல்லபெயர் எடுக்கப்போகிறார் என்பதுதான் நாம் முன்வைக்கும் ஒரே ஒரு கேள்வி.