October 19, 2025
  • October 19, 2025
Breaking News
June 8, 2019

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி

By 0 867 Views

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியடைந்தது.

இதையடுத்து கட்சி கூட்டத்தில் நாட்டிலேயே முதல் முறையாக 5 பேரை துணை முதல்வராக நியமித்தார் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் 25 கேபினட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுத்தார். அவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற நாள் முதலே, தன் அதிரடி நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை முறைப்படி அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி.

அத்ற்கு முன்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.