August 30, 2025
  • August 30, 2025
Breaking News
July 4, 2018

த்ரிஷாவை வீட்டுக்கு அனுப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்

By 0 1310 Views

ஹீரோக்களுக்கு இருக்கும் வசதியே அவர்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால், ஹீரோயின்களுக்கு வயதாகிவிட்டால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அல்லது அக்கா, அண்ணி என்று கிடைத்த வேடங்களில் நடிக்க வேண்டும்.

இப்போது ஹரியின் இயக்கத்தில் ச்சீயான் விக்ரம் நடிக்க வேகமாகத் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரமின் ஜோடியாகி இருக்கிறார். இந்த வேடத்தில் சாமி முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பாகத்திலும் திரிஷாவே நடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. காரணம், ஐஸ்வர்யா ராஜேஷ் திறமையான நடிகை என்பதால்தானாம்.

Saamy2

Saamy2

இதே படத்தில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆகா, சாமி ஸ்கொயர் படத்தில் சீயான் இளம் நாயகியருக்கு தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்பது புரிகிறது.

ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீடும் இருக்குமாம்.

அடிச்சு தூள் கிளப்புங்க ஆறுச்சாமி..!