பொங்கல் உற்சாகம் முடிவுக்கு வரும் நாளை அடுத்தகட்ட எதிர்பார்ப்புகுள்ளாகும் படங்கள் நாளை முதல் (18-01-2019) தொடங்கவிருக்கின்றன.
பொங்கல் படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இன்னும் நல்ல ஓட்டத்தில் இருக்கும் படமான ‘2 பாய்ண்ட் ஓ’ தந்த உற்சாகத்தில் அதன் தயாரிப்பாளர்களான லைக்கா புரடக்ஷன்ஸுடன் ஷங்கர் மீண்டும் இணையும் ‘இந்தியன் 2’ படம் அதன் முதல் பாகத்தில் நடித்த கமலே நடிக்க மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகி தயாராகவிருக்கிறது.
Tamilarasan
அதிலும் இதுதான் கமல் நடிக்கும் கடைசிப்படம் என்று செய்திகள் வெளியான நிலையில் அதுவும் படத்துக்கான பெரிய விளம்பரமாகியிருக்கிறது. மிகப்பெரிய படம் என்பதால் இதன் வெளியீட்டுத் தேதியை யாரும் இப்போதைக்கு அனுமானித்துவிட முடியாது.
படத்துக்கு வெளியான கமலின் முதல் பார்வை தோற்றமும், அந்த மேக்கப்பும் அசத்தலாக அமைய, இந்தப்பயணம் நாளை தொடங்குகிறது.
இன்னொரு பக்கம் இந்த அளவுக்குப் பெரிய படம் இல்லாவிட்டாலும் இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி முதல்முறையாக இசை ஞானியின் இசையில் நடிக்கும் ‘தமிழரசன்’ படமும் நாளை தொடங்குகிறது. இதன் இயக்குநர் ‘தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் என்பது குறிப்பிடத் தக்கது.
வாழ்த்துகள்..!