October 15, 2025
  • October 15, 2025
Breaking News
November 21, 2019

விஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

By 0 991 Views

விஜய் அடுத்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எச்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 64’ என்ற ‘விஜய் 64’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. 

120 நாள்கள் படமாகவிருக்கும் இந்தப்படத்துக்காக விஜய் மட்டும் 100 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பது அவர் படங்களிலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் ஷெட்யூல்களுக்கு இடையில் எடுக்கப்படும் பிரேக்குகள் கூட ஒரு வாரத்துக்கு மிகாமலேயே இருக்கிறது.   

சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்து இப்போது இரண்டாவது ஷெட்யூலுக்காக டெல்லியில் முகாமிட்டிருக்கும் டீம் இன்னும் சில தினங்களிலேயே ஷெட்யூலை முடித்துவிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த ஷெட்யூல் டிசம்பரில் ஆரம்பிக்கப்பவிருக்கிறது. அதில் இந்தப்படத்துக்கு வில்லனாகும் விஜய்சேதுபதியின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய் சேதுபதியின் பிற படங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒரே ஷெட்யூலில் இந்தபடத்துக்கான காட்சிகளை ஒரே மூச்சில் முடிக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

பிப்ரவரியில் மொத்தப்படமும் ஷூட்டிங் முடிய, ஏப்ரல் 2020-ல் வெளியாகத் தயாராகிறது ‘தளபதி 64’.