September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா
September 26, 2020

எஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா

By 0 799 Views

நேற்று மரணம் அடைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து காலத்தை வெல்லும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம். 

மருத்துவமனையில் எஸ்பிபி சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இளையராஜா ஒரு காணொளி அனுப்பியிருந்தார். அதில் சீக்கிரம் எஸ்பிபி குணமடைந்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக எஸ்பிபி மரணமடையவே அதில் மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் இளையராஜா. அதற்காக வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பேச்சு வராமல் தழுதழுத்து முடித்துக்கொண்டார் இசைஞானி இளையராஜா.

தன்னுடைய நண்பனுடைய ஆத்மா சாந்தி பெறவும் சொர்க்கம் அடையவும் தனக்கு பிடித்தமான திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா.

ஒரு நண்பனின் கதை இது..!