September 15, 2025
  • September 15, 2025
Breaking News
October 15, 2019

சந்தானத்துடன் கை கோர்க்கும் ஹர்பஜன் சிங்

By 0 826 Views
Harbhajan Singh

Harbhajan Singh

எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.  அதேபோல் தற்போதும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜாவும் நடிகராக ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் இணைகிறார்கள் என்ற   இனிப்பான செய்தியை  இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டிக்கிலோனா என்ற தலைப்பும், முதன்முதலாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பதும் எப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதேபோல் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்ற செய்தியும், ஹர்பஜன் சிங் படத்தில் அதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் படத்தை இந்திய அளவில் பெரிய படமாகவும், எதிர்பார்க்கக் கூடிய படமாகவும் உயர்த்தியுள்ளது.

இளையராஜாவின் ‘இளைய’ ராஜாவான யுவன்சங்கர் ராஜா  தான் இசை அமைக்கும் படம் எந்த ஜானராக இருந்தாலும் அதில் தன் தனித்துவத்தை மிகச்சிறப்பாக பதிப்பவர். இந்த டிக்கிலோனாவிலும் அது மிக அற்புதமாக வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.

மைதானத்தில் பந்து வீச்சாளராக இருக்கும் போது பேட்ஸ்மேனுக்கு வில்லனாகவும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் உற்சாகப்படுத்தும் போது அவர்களுக்கு நண்பனாகவும் இருப்பவர் ஹர்பஜன் சிங்.  குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களின் தனித்த அன்பை பெற்றவர் ஹர்பஜன் சிங். அவர் சந்தானத்தின் டிக்கிலோனாவில் நடிகராக இணைந்திருப்பதால் 2020-ஆம் ஆண்டு ரசிகர்கள் டிக் அடிக்கும் படமாக டிக்கிலோனா  இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்

சந்தானம் மூன்று வேடங்களில் வரவிருக்கும் இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற இருக்கிறது. நான்கு பாடல்களும் வெவ்வேறு கேட்டகிரியில் அசத்தும் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியின் திரைக்கதையும், அவரது  நேர்த்தியான இயக்கமும் ரசிகர்களின் கலகலப்பிற்கு பெரு விருந்து படைக்கும் என்கிறார்கள்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தப்பட ஒப்பந்தம் குறித்து ஹர்பஜன் சிங் தன் தமிழ் ட்வீட்டில், 

என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும்

,#dikkiloona @SoldiersFactory,@iamsanthanam குழுவுக்கு நன்றி.#தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே.உங்களால் வெள்ளித்திரையில்.இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்…” என்று பதிவிட்டிருக்கிறார்.