August 31, 2025
  • August 31, 2025
Breaking News
February 24, 2020

சூர்யாவுக்கு ஆப்பிளில் கதை எழுதும் ஹலிதா ஷமீம்

By 0 945 Views

கடந்த வருட இறுதியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி. நான்கு வெவ்வேறு சூழல், பருவங்களை உள்ளடக்கிய காதல் கதைகளைக் கொண்டிருந்த இந்தப்படத்தைப் பார்த்து சொக்கிப் போன சூர்யா இந்தப்படத்தைத் தன் சொந்த பேனரில் வெளியிட்டு படத்துக்கு எதிர்பாராத கவனிப்பு ஏற்படச் செய்தார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சுனைனா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்த இந்த படத்தை ஹலிதா ஷமீம் இயக்கி இருந்தார். சூர்யாவின் தலையீட்டில் இந்த படம் ரசிகர்களைச் சென்றடைந்து நல்ல பாராட்டுகளையும், கூடவே வெற்றியையும் பெற்றது. ஆனால், வெளியிட்டதுடன் நிற்கவில்லை சூர்யா.

தற்போது இந்த படக்குழுவினரை பாராட்டும் விதமாக சூர்யா தன் மனைவி ஜோதிகா சமேதராக இயக்குநர் ஹலிதா உள்ளிட்ட படக்குழுவினரை வீட்டிற்கு அழைத்து பாராட்டு விழா நடத்தியதுடன், ஹலிதாவுக்கு ‘ஆப்பிள் மேக் புக்’ ஒன்றைப் பரிசாக தந்துள்ளார்.

சும்ம இருக்குமா இயக்குநரின் மூளை..? சுறுசுறுப்படைந்த ஹலிதா, “அந்த ஆப்பிளில்தான் முதன் முதலா சூர்யாவுக்கான கதை எழுதப் போறேன்..!” என்று அறிவித்திருக்கிறார்.

ஆப்பிள்ள எழுதினா கதையும் இனிப்பா இருக்குமோ..?