இது 2021 ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா vs காங் படத்தின் தொடர்ச்சியாகும்.
அத்துடன் காட்ஸில்லா வரிசையில் 38வது படமாகவும், கிங் காங் வரிசையின் 13வது படமாகவும் அமைகிறது.!
ஆடம் விங்கார்ட் இயக்கியுள்ள இந்த படத்தில் காட்ஸில்லா மற்றும் காங் ஒரு மர்மமான ஹாலோ எர்த் அச்சுறுத்தலுக்கு எதிராக இணைகிறார்கள்,
அந்த ஹலோ எர்த்துக்கு நாயகி ரெபக்கா ஹால் மற்றும் குழுவினர் பயணம் செய்யும் வேளையில் டைட்டன்ஸ் மற்றும் ஸ்கல் தீவின் இதுவரை சொல்லப்படாத தோற்றம் குறித்தும் கதை சொல்கிறது.
அந்த தீவின் வடிவமைப்பும் அங்குள்ளவர்களின் வாழ்க்கை முறைகளும் பிரமாண்டப் படுத்தப் பட்டிருக்கிறது. டெலிபதி மூலம் மட்டுமே பேசிக்கொள்ளும் அவர்களது வழக்கமும் பிரமிக்க வைக்கிறது.
சர்வவல்லமையுள்ள காங் மற்றும் பயமுறுத்தும் காட்ஸில்லாவை எதிர்த்துப் போராடும் புதிய சக்தியின் சாகசங்களும் இதில் அடக்கம். இதுவரை காட்ஸில்லாவும் கிங்காங்குமே எதிர்த்து அடித்துக் கொண்டிருக்க இந்த படத்தில் அவர்கள் இருவருக்கும் வேறு ஒரு முக்கியமான வேலை தரப்பட்டிருக்கிறது.
ரெபெக்கா ஹாலுடன் இந்தப் படத்தில் பிரையன் டைரி ஹென்றி, டான் ஸ்டீவன்ஸ், கெய்லி ஹாட்டில், அலெக்ஸ் ஃபெர்ன்ஸ், ஃபல்லா நடித்திருந்தாலும் இவர்களை எல்லாம் தாண்டி காட்சில்லாவும் கிங்காங்குமே கவனம் பெறுகின்றன.
காட்ஸில்லாவும், கிங்காங்கும் மோதிக் கொள்வதில் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் இருந்திருக்க கூடும் ஆனால் அது பற்றியெல்லாம் கதையில் எதுவுமே சொல்லவில்லை.
ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லை. கிங்காங் இன் பழுதுபட்ட பல்லை பிடுங்கும் ஒரு காட்சிகூட அத்தனை பிரம்மாண்டம்.
குழந்தைகள் ரசிக்கக் கூடிய படமான இதில் குட்டி குரங்கு ஒன்று கானுடன் சேர்ந்து செய்யும் அட்டகாசம் குழந்தைகளை குதூகலிக்கவே வைக்கும். பிற குரங்குகளுடன் கானின் சண்டையும் அதிசயிக்க வைக்கிறது.
எகிப்து அமெரிக்கா என்று பல நாடுகள் பயணப்பட்டு படமாக இருந்தாலும் இதன் பெரும்பகுதி குயின்ஸ்லாந்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.
அலெஸாண்ட்ரோ ஓங்காரோவின் விஷுவல் எபெக்ட்ஸ்க்கு தக்கவாறு காட்சிகளை ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பென் செரெசின்.
டாம் ஹோல்கன்போர்க் மற்றும் அன்டோனியோ டி லோரியோ இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இசையை மிஞ்சி சவுண்ட் எபெக்டே மேலோங்கி நிற்கிறது.
வார்னர் பிரதர்ஸ் படங்கள் 2D மற்றும் IMAX இல் இந்தப் படத்தை வெளியிட்டு இருக்கிறது.