February 17, 2026
  • February 17, 2026
Breaking News
February 17, 2026

மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி பெற்ற பி.டி.செல்வகுமாருக்கு பாராட்டு..!

By 0 15 Views

நடிகர் விஜய் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 வழங்கி பி.டி செல்வகுமார் உதவி

சினிமாவில் நடிகர் விஜய் யின் மேலாளராகவும் பல படங்களை வெளியிட்டு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அவருக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக திரையுலகத்தை சார்ந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்

முரளி ராம நாராயணன் (தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ) பேசியதாவது

தேனாண்டாள் பிலிம்ஸ்க்கும் எனது தந்தை ராம நாராயணனுக்கும் மிகவும் வேண்டியவர் பல படங்கள் வெளிவர கடினமாக உழைத்தவர் பி.டி செல்வகுமார். இவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல பொறுமையாக அன்பினால் எதையும் சாதிக்க கூடியவர். அவரை ஃபாலோ பண்ணு என்று விஜய்யிடம் கூறி யி ருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜயின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணம் என்று எனது தந்தையும் கருமாரி கந்தசாமியும் சொல்லுவார்கள்.. பல பிரச்சினைக்குரிய படங்களை இலகுவாக பேசி முடிப்பார்.. இவருக்கு தி.மு.கவில் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து மனமார பாராட்டுகிறேன்.

தமிழ்குமரன் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் சங்கத் துணைத் தலைவரும் லைக்கா நிறுவனத்தின் சி.இ.ஓ-மான தமிழ் குமரன் பேசும் போது

பி.டி செல்வகுமார் சாருடன் 15 ஆண்டுகால நட்பு எனக்கு உண்டு.. பெரிய வியூக வகுப்பாளர் விஜய் போன்ற ஒரு நடிகரை உச்சத்துக்கு கொண்டுவர போராடியவர் பொறுமையும் பணிவும் தான் அவரது பலம்.. நான் தயாரித்த என்றென்றும் புன்னகை படத்திற்கு ஜீவா கால்ஷீட் தந்து பல உதவிகளை செய்தவர் அவர் அசாத்திய திறமை சாதுர்யமும் பல படங்கள் வெளிவர உதவியது… அவர் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் அரசு பள்ளிகளுக்கு 25 கலையரங்கங்கள் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.. இன்று அவருக்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் பொறுப்பு தி.மு.க வழங்கியுள்ளது இன்னும் அவருடைய உழைப்புக்கும் நேர்மைக்கும் பல பதவிகள் வரவேண்டும்

சோழா பொன்னுரங்கம் – தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் சுறுசுறுப்பானவர் எந்த வேலையாக இருந்தாலும் முடியும் என்பர் அவரது பயணத்தில் எதுவும் நடக்க முடியாது என்று இல்லை பலருடைய வெற்றிக்கு ஏணியாக இருந்தவர்

நடிகர் உதயா –

பிடி செல்வகுமார் நல்ல பண்பாளர் சினிமாவில் பல பிரச்சினைகளை ஊதி பெரிதாக்கி விடுவார்கள் ஆனால் அத்தனையும் பொசுக்கி சாதிப்பவர் அவர் விஜய் மட்டுமல்ல பல திரைப்படங்கள் வெளிவர உதவியவர் இரும்புத்திரை திரைப்படம் வெளிவர போராடி வெளிக்கொண்டு வந்ததை நான் அறிவேன் அவருக்கு தி.மு.க வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்தது சரியானதே.

விஜய்க்கு டீ, ஜூஸ் சாப்பாடு கொடுத்து குடை பிடித்து உதவியாளராக இருந்தவர் செல்வம் இவர் தற்போது வேலை இழந்து ஆபரேஷன் செய்யப்பட்டு அவஸ்தைப்படுகிறார்.. அவரிடம் உதவிக்கு போராடிய போது தான் பி.டி செல்வகுமார் ஐம்பதாயிரம் வழங்கி உதவி புரிந்தார்…அதை அவரது மனைவி மகள் பெற்று கொண்டனர்.

செல்வம் பேசியதாவது…

இது காலத்தால் செய்த உதவி விஜய் அவர்கள் என்னை கைவிட்டு விட்டார் ஆனால் பிடி செல்வகுமார் உதவியுள்ளார் ஏற்கனவே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இறந்தபோது உதவினார் தாடி பாலாஜிக்கு உதவினார் வறுமையால் வாடும் பல நடிகர்களுக்கும் உதவியுள்ளார்…இன்று எனக்கும் உதவி மட்டும் இல்லாமல் படத்தில் வேலை பார்க்க வேலையும் வாங்கி தந்துள்ளார் மனித நேயம் சாகவில்லை பி.டி செல்வகுமார் ரூபத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறது எனக்கு அவர்தான் கடவுளாக தெரிகிறார் என்று கூறி முடித்தார்..