April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தீபாவளிக்கு தியேட்டர் கிடைக்க போராடுவேன் – எனிமி தயாரிப்பாளர் வேதனை ஆடியோ
October 22, 2021

தீபாவளிக்கு தியேட்டர் கிடைக்க போராடுவேன் – எனிமி தயாரிப்பாளர் வேதனை ஆடியோ

By 0 538 Views

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு பிரமாண்ட படம் வர இருப்பதால், இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் தராமல் படம் வெளிவருவதை தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், எனிமி படத்தை தயாரித்துள்ளேன். நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம். ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம் வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல்.

அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் ஆதரவு கேட்கிறேன். சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தையே திரையிட்டால் எப்படி?. எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை. அப்படியொரு சாதனை இதுவரை நடந்ததும் கிடையாது.

என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 தியேட்டர்கள் தான். அது கிடைத்தாலே போதும் எங்களுக்கு வரவேண்டிய ஷேர் சிறியது தான் என்றாலும் எங்களுக்கு அது கிடைத்துவிடும்.

எனக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்க நான் போராடுவேன்..!”

இவ்வாறு அந்த ஆடியோவில் வினோத் குமார் கூறியுள்ளார்.