November 28, 2025
  • November 28, 2025
Breaking News
December 28, 2020

கமல்ஹாசன் அரசியலில் ஜீரோ – எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

By 0 642 Views

தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கினார்

அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம்

ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது.சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்…துரைமுருகன் தயாராக உள்ளாரா?

புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுக-வை விமர்சிப்பதா?

மின்னனு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை

திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான்

ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் பொய்யான ஊழல் புகார் கொடுத்துள்ளனர்!

திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம் அரசியலில் ஜீரோ தான் என்றார்.
‌‌