January 30, 2026
  • January 30, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குனர் சிகரத்தையும் இமயத்தையும் இணைய வைத்த தாமிரா மரணம்
April 27, 2021

இயக்குனர் சிகரத்தையும் இமயத்தையும் இணைய வைத்த தாமிரா மரணம்

By 0 721 Views

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. அவருடன் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய பங்காற்றி இரக்கிறார்.

பின்னர் 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் பெரும் இயக்குநர்களான கே.பாலச்சந்தரையும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்திருந்தார்.

இதன்பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கினார். இப்போது சத்யராஜ் நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். அத்துடன் முழு திரைப்படம் இயக்கம் பொறுப்பையும் ஏற்கவிருந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் தாமிரா. இதற்காக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வென்டிலேட்டர் இல் இணைக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

53 வயதான அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. அவரது உடல் உடனடியாக அவரது சொந்த ஊரான திருநெல்வேலி எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

தாமிராவின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.