November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் போன படம் ஜீனியஸ் – சுசீந்திரன்
October 24, 2018

விஜய் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் போன படம் ஜீனியஸ் – சுசீந்திரன்

By 0 1051 Views

தன் படங்களில் சமுதாயம், கல்வி, விளையாட்டு என்று சமூகத்தின் மீதான அத்தியாவசிய அக்கறையுடன் படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். இப்போது சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தை இயக்கியுள்ளார்.

வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் இப்படம் பற்றி சுசீந்திரன் கூறியது…

“பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு ஸம்பவம் நடந்தது. ‘ஐடி’ துறையில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்த ஒரு நபர் அதைக் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார்.

அப்படிச் சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு விட்டுச் சென்றார் அந்த நபர். அந்தக் கோபம் பயங்கரமானதாக… எல்லை மீறியதாக இருந்தது.

அது அவருடைய ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தத்தின் காரணமாகத்தான் என்று உணர்ந்தேன். நல்ல படித்த , பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ‘ஸ்ட்ரெஸ்’க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றியதுதான் இப்படத்தின் கதை.

இக்கதையை நான் விஜய் , அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.

இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வியை மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ‘ஜீனியஸ்’ முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது.

ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார். இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது. நான் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்விதான் கற்றேன்.

நமது அரசாங்கம் ஆங்கில வழிக் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாகக் கூறியுள்ளோம்..!”