April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பெண்குயின் படம் இளைய இயக்குனர்களின் வாழ்வை பாதித்து விடும் – இயக்குனர் ஆச்சார்யா ரவி
June 19, 2020

பெண்குயின் படம் இளைய இயக்குனர்களின் வாழ்வை பாதித்து விடும் – இயக்குனர் ஆச்சார்யா ரவி

By 0 838 Views
Aacharya Ravi

Aacharya Ravi

இயக்குனர் பாலாவின் அசோசியேட் இயக்குனர் மற்றும் ஆச்சார்யா பட இயக்குனருமான ஆச்சார்யா ரவி, இன்று OTT தளத்தில் வெளியான பென்குவின் படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜூக்கு தன் முக புத்தகத்தில் மனம் திறந்து எழுதிய மடல்…

“நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு…

வேதனையும் கண்ணீரும் கலந்து எழுதுகிறேன்….நீங்க தயாரிச்சு OTT மூலம் வெளியான பெங்குவின் படம் பார்த்தேன்….என் போன்ற நிறைய இயக்குனர்கள் தங்கள் படத்தை வெளியிட வேண்டி Amazon வாசலில் காத்து கிடக்கிறோம்….

ஆனால் இது போன்ற உங்களின் படங்கள் எங்கள் வாழ்க்கையை பாதித்து விடும் என்ற அச்சம் வந்து விட்டது…எங்களுக்கு எந்த பின்புலமும் இல்லை…ஆனால் உங்கள் பிரபல்யம் மூலம் மட்டுமே படம் வாங்கப் பட்டு வெளியாகி உள்ளது….

Karthik Subbaraj

Karthik Subbaraj

இந்த படத்தின் விமர்சனங்கள் மேற்கொண்டு தமிழ் படங்களை வாங்கி வெளியிட வேண்டுமா என்று Amazon யோசித்து விடுமோ என்று பயமாக உள்ளது…திருத்த வேண்டியது அமேசானை அல்ல…திருந்த வேண்டியது நாம் அல்லவா? “