August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தேவ் இயக்குநரிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்
December 25, 2018

தேவ் இயக்குநரிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்

By 0 1182 Views

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை சூர்யா வெளியிட்டதைப் போலவே படத்தின் இசை டிசம்பர் 29ம் தேதி வெளியாகிறது என் கிற தகவலை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று வெளியிட்டார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் இசையமைப்பில் வரும் படம் என்பதால் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

தேவ் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸின் எஸ்.லக்ஷ்மண்  தயாரிப்பது தெரிந்த விஷயமாக இருக்கலாம்..

Harris Jayaraj

Harris Jayaraj

மேலும் இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜும், ரகுல் ப்ரீத் சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, ‘ஸ்மைல் சேட்டை’ விக்னேஷ், அம்ருதா, வம்சி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் கதையை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் கூறி முடித்ததுமே இயக்குநர் ரஜத் ரவிசங்கரை கட்டியணைத்துக் கொண்ட ஹாரிஸ், இப்படத்தில் என்னுடைய பங்கு நிச்சயம் இருக்கும் என்றிருக்கிறார். உறுதியளித்ததைப் போலவே 5 பாடல்களையும் அற்புதமாக அளித்ததுடன் திட்டமிட்டபடி டிசம்பர் 29ம்தேதி வெளியிட முழு ஒத்துழைப்புடன் பாடல்களை முடித்துத் தந்திருக்கிறார் ஹாரிஸ்.

ஆடியோவைக் கேட்க இன்னும் நான்கே நாட்கள் காத்திருங்க..!”